ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ்

*
நானும் எனது வடஇந்திய நண்பனும் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் செல்ல திட்டமிட்டு காஷ்மிரி கேட் பேருந்து நிலையத்தை இரவு சென்றடைந்தோம். தேராதூநிலிருந்து ரிஷிகேஷ் செல்லும் வழியின் இருபக்கமும் அழகாக இருக்கும் என்று என் அலுவலக நண்பர் ஒருவர் சொன்னதால். தேராதூன் பேருந்து எடுத்து செல்லலாம் என்று என் நண்பனிடம் சொல்ல, அது ரொம்ப சுத்து என்று அவன் சொல்ல, அது எனக்கு தெரியும் நீ சும்மா வா என்று கூறிக்கொண்டே தேராதூன் பேருந்தில் ஏறினேன் நண்பனும் "பாகல்" என்று என்னை திட்டிக்கொண்டே என் அருகில் வந்தமர்ந்தான்.

வண்டி கிளம்பியது, முதல் முறை உத்ராஞ்சல் செல்வதால் சன்னல் அருகில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றேன். என் நண்பன் முனகிக்கொண்டே வந்தான். விடியற்காலை தேராதூன் பேருந்து நிலையத்தை அடைந்தோம். ஒரு மாநில தலைநகர பேருந்துநிலையமா என்று வெறிச்சோடி கிடந்தது கேள்விகேட்கவைத்தது. இருந்தாலும் நமக்கு காபி தானே முக்கியம் என்று ஒரு காபி வாங்கி குடித்துக்கொண்டு இருக்கும் பொழுதே ஹரித்வார் பேருந்து வந்து சேர்ந்தது, முதல் ஆளாக பயணசீட்டு வாங்கிகொண்டு மீண்டும் வலது சன்னலோரம் அமர்ந்துகொண்டேன்

இரவு சரியாக தூங்காததால் தூக்கம் என்னை துரத்திக்கொண்டிருந்தது.. இருந்தாலும் இவ்வளவு தூரம் சுற்றிக்கொண்டு வந்தது வீனாங்கி விடக்கூடாது என்று வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். வந்தது வீண்போகவில்லை என்று அந்த இயற்க்கை அழகு நிறுபித்தது, ஆனால் என்நன்பன் அதை பார்க்க கொடுத்துவைக்காமல் தூங்கிவிட்டான். ஹரித்துவாரை அடைந்தவுடன். நேராக குளிக்க நண்பன் கூட்டிச்சென்றான் கங்கைல தான் குளிக்கணும் என்று கூட்டிசென்றான், நான் முதன்முதலில் கங்கையை பார்த்தது அங்குதான். தெளிந்த தண்ணீர், கொஞ்சம் அசந்தால் அடித்துசென்றுவிடும் போலிருந்தது நீரின் வேகம், மிக அதிகமாக கூட்டம் இருந்ததால் மெதுவாக குளித்துவிட்டு பக்கத்தில் இருந்த கோவிலுக்கு சென்று வந்தோம். பிறகு ரோப் கார் வழியாக மானச தேவி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டோம், ஆனால் ரோப் காரில் செல்ல கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் நடந்தே சென்றோம்.






நம்பிக்கை அவ்வளவாக இல்லாததால் ஏதோ பேருக்கு சென்றது போல கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பினேன். இதுக்கு மேல இங்க வேணாம் நாம ரிஷிகேஷ் செல்லலாம் என்று ஒரு வண்டியில் ஏறினோம் நின்றுகொண்டிருந்த ஒரு பெரிய சிவன் சிலையை கடந்து சென்றோம். ரிஷிகேசில் ராமன் ஜுலா அருகில் அந்த வண்டிகாரர் இறக்கிவிட்டார், ராமன் ஜுலா வழியாக கங்கையை கடந்து அருகில் இருந்த ஹோட்டலில் ஒரு அறை எடுத்துக்கொண்டோம், சிறிது ஓய்வுக்கு பின், ரிஷிகேசை சுற்ற கிளம்பினோம்.

கங்கை நதி மிக அகலமாக இருந்தது, இரு கரைகளுக்கும் செல்ல படகு சவாரி இருக்கின்றது மற்றும் ராமன் ஜுலா, லக்ஷ்மன் ஜுலா என்று இரண்டு தொட்டில்கள்(பாலங்கள்), இருக்கின்றது.(லக்ஷ்மன் பாலம் எங்கிருக்கின்றது என்று ஒருவரை நான் கேட்க பாலம் அல்ல தொட்டில் என்று சொல்லவேண்டும் என்று முறைத்துக்கொண்டு சென்றார்), ஊரில் பாதிக்குமேல் வெளிநாட்டவர், அவர்களில் பெரும்பாலோனோர் காவி உடையில் அலைந்துகொண்டிருந்தனர். நிறைய சாமியார்கள் காவிவுடையில் இருந்தனர். மற்றும் திரும்பி இடம் எல்லாம் தியானபயிற்சி விளம்பரங்கள் இருந்தது.

ராமன் ஜுலா அருகில் இருந்த கோவிலுக்கு சென்றோம், பிறகு தேநீர் குடித்துவிட்டு கங்கையின் கரையில் மெதுவாக நடந்து சென்றோம். சிறு சிறு குழுக்களாக தியான பயிற்சி செய்துகொண்டிருந்தனர், ஒருசில வெளிநாட்டவர் அதிகமுடி வளர்த்துக்கொண்டு சாமியார் போல் காட்சியளித்தனர். சிறிது தூரத்திலேயே ஆற்று மணலில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். சுற்றிருந்த மலைகள் கங்கைக்கு மேலுமும் அழகு சேர்த்தது. இங்கிருந்து தான் இமயமலை ஆரம்பிக்கிறது என்று தெரிந்ததும் ஒருவித மகிழ்ச்சி என்னுள் பரவியது, நதியின் சத்தத்தை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை அவ்வளவு அமைதியாக இருந்தது.

சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்லலாம் என்று முடிவெடுத்து ஆற்று மணலில் தனி தனியே அமர்ந்துகொண்டோம். எதிர் கரையில் முட்செடிகளுக்கு நடுவே யாரோ அமர்ந்திருப்பது போல் தோன்றியது ஆற்றின் அகலம் அதிகம் என்பதால் சரியாக தெரியவில்லை, உடனே புகைப்பட கருவியை கொண்டு ஜூம் செய்து பார்க்க ஒரு யோகி தியானம் செய்துகொண்டிருந்தது தெரிந்தது, அனால் முட்செடிகளுக்கு நடுவில் அந்த இக்கட்டான இடத்தில கடினப்பட்டு சென்று தியானம் செய்வதன் நோக்கம் எனக்கு புலப்படவில்லை,

கங்கை நதியில் குழந்தை போல் சிறுது நேரம் விளையாடிவிட்டு மணலில் வந்தமர்ந்தேன். சிறிது நேரத்திலேயே அமைதி என்னை கவ்விகொண்டது நன்றாக உணரமுடிந்தது ஒருமுறை அங்கு வந்தவர் மீண்டும் மீண்டும் வருவதன் காரணம் ஏதோ புரிந்தது போல தோன்றியது. ஆனால் அதிகமானோர் காவயுடையில் திரிவதன் காரணம் புலப்படவில்லை. ஆதவன் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருப்பதை உணர்ந்து லக்ஷ்மன் ஜூலாவை நோக்கி பயணித்தோம். சிறிது நேர நடைபயணத்திற்கு பின் லக்ஷ்மன் ஜூலாவை அடைந்தோம். அருகில் இருந்த கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் அனைத்து வகையான லிங்கங்களும் இருந்தது. கோவிலின் மேல் தளத்திலிருந்து பார்க்க கங்கையின் வளைவு, லக்ஷ்மன் ஜுலா மற்றும் கங்கையில் ராப்டிங் செய்து கொண்டிருப்பவர்களை பார்க்க அழகாக இருந்தது.



(ராமன் ஜூலா)

(லக்ஷ்மன் ஜூலா)


லக்ஷ்மன் ஜூலாவை கடந்து சாலை வழியாக (எதிர் கரை), ராமன் ஜூலாவை நோக்கி பயணித்தோம். வழியில் லக்ஷ்மன் சிலையை கடக்கும் பொழுது. சுயநலமில்லாத ஒரு நல்ல மனிதன் லக்ஷ்மன். என்று என் அலுவலக தமிழ் சீனியர் எப்பொழுதோ சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. சிறிதுநேர நடைபயனத்திருக்கு பின் ராமன் ஜூலாவை அடைந்தோம் அறைக்கு செல்வதற்கு முன் ஒரு உணவகத்திற்கு சென்றோம். வெளிநாட்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது போல் தோன்றியது ஆனால் அதிக தாடியுடன் எங்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த வெளிநாட்டவருக்கும் எங்கள் கதி தான்.

எதிரில் இருந்தவர் தன்னை ஈரோப்பில் உள்ள ஒரு சிறிய நாட்டை சேர்ந்தவன் என்று அறிமுகபடுத்திக்கொண்டார். சில வருடங்களுக்கு முன் வந்தபொழுது இருந்த அமைதி இப்பொழுது இங்கு இல்லை மற்றும் மக்கள் தொகை அதிகரித்துவிட்டது அதனால் அமைதி போய்விட்டது என்று குறைபட்டுக்கொண்டார். மேலும் அவர் அமைதியை தேடி பத்ரிநாத் செல்லவிருப்பதாக கூறினார். ஏற்கனவே என் கூட வந்த நண்பன் பத்ரிநாத்தை பற்றி கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அவர்கள் கூறியதை வைத்து ஒழுங்கற்ற பாதை மற்றும் கொடியமிருகங்கள் நடுவில் ஒரு பெரியமலை மீது அந்த கோவில் இருப்பதாக கற்பனை செய்துகொண்டேன் ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் அங்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் அப்பொழுது என்னுள் விதைக்கப்பட்டது. மேலும் அவரது மொழி சமஸ்கிருதத்தை ஒத்திருக்கும் என்று கூறினார். தியானம் கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரைகளும் கிடைத்தது.

உணவை முடித்துக்கொண்டு அறைக்கு திரும்பும் வழியில் அமர்ந்திருப்பது போல் ஒரு பெரிய சிவன் சிலை தென்பட்டது அதன் அரிகில் ஒரு வெள்ளைக்கார பெண்மணி வெள்ளையுடையில் எதோ பொன்மொழிகளை அங்கு அமர்ந்திருப்பவர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தார். அந்த சிலையின் அரிகில் செல்ல எனக்கு ஆவல் ஏற்பட சூவை கலட்டதொடங்கினேன்.. அதற்குள் அந்த பெண்மணி சூவுடனே வரலாம் என்று கூறினார். சிவன் சிலை அரிகில் செல்வதற்குள் எனக்கு குற்றஉணர்வு மேலோங்க. திரும்பி வந்து சூவை கழற்றிவிட்டு சிலையரிகில் சென்றேன் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்து இரவில் நிலவொலியில் கங்கையை கண்டுவிட்டு அறைக்கு திரும்பினோம்.

அடுத்தநாள் காலை அறையை காலிசெய்துவிட்டு கடைத்தெருவுக்கு சென்றோம் ராமன் ஜுலா அருகில் இருக்கும் கடைகளில் ருத்ராட்சம், ஸ்படிக மாலை கிடைக்கின்றது ஆனால் அசலா என்று பார்த்து வாங்குவது உங்கள் சாமர்த்தியம் அதே போல் ஓரிரு புத்தகசாலைகள் உள்ளன பெரும்பாலான ஆன்மீக புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட தொகைக்கு மேல்வாங்கினால் தான் பண அட்டையை பயன்படுத்தமுடியும். பணமாக கையில் கொண்டு செல்வது நலம். அங்கிருந்து நேராக பேருந்து நிலையத்திற்கு சென்றோம். முக்கியசாலையில் இருந்து ஒரு சிறிய சாலை வழியாக பேருந்து நிலையத்திற்கு செல்லவேண்டும். அப்படி இக்கட்டான இடத்தில் பேருந்து நிலையத்தை வைத்திருந்த அரசாங்கத்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

நல்ல குளிர் சாதனம் செய்யப்பட்ட பேருந்தை பிடித்து டில்லியை சென்றடைந்தோம். அடுத்தநாள் அலுவலகம் சென்றதும் என்னை கூட்டி சென்ற நண்பனுக்கு எங்கள் கூட வேலைசெய்யும் சக நண்பரிடம்(கொஞ்சம் வயதானவர்) இருந்து நல்ல திட்டு கிடைத்தது, நம்மஊர் பெரியவர்கள் காசிக்கு செல்வது போல் வடஇந்தியர்கள் ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் செல்வார்களாம். வயசான காலத்துல போகவேண்டிய இடத்துக்கு இப்பவே என்னை கூடிட்டு போனதுக்குதான் அந்த திட்டு. ஆனால் எனக்கு என்னமோ ஹரிதுவார் மற்றும் ரிஷிகேஷ் அனைவரும் செல்ல அருமையான இடமாக தோன்றியது குறிப்பாக ஆன்மீக தேடல் உள்ளவர்களை வெகுவாக ஈர்க்கும்.

குறிப்பு : ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் செல்பவர்கள், டில்லியில் காஷ்மிரி கேட்டில் இருந்து ரிஷிகேஷ் பேருந்தை எடுத்தால் ஹரித்துவாரில் இறங்கிகொள்ளலாம், ஹரித்துவாரில் இருந்து ரிஷிகேசுக்கு அறை மணிநேரத்தில் சென்றுவிடலாம்

18 comments:

அ.மு.செய்யது said...

பயணக்குறிப்புகள் அருமை.

//ஒரு யோகி தியானம் செய்துகொண்டிருந்தது தெரிந்தது, அனால் முட்செடிகளுக்கு நடுவில் அந்த இக்கட்டான இடத்தில கடினப்பட்டு சென்று தியானம் செய்வதன் நோக்கம் எனக்கு புலப்படவில்லை//

அங்கு தான் சித்தாந்தமும் வேதாந்தமும் விற்கப்படுகிறதோ ??

Suresh said...

மச்சான் புது பிளாக் புது டெம்பிளேட் கலக்குற ;)

Suresh said...

அரம்பமே நல்லா இருக்கு

Suresh said...

remove word verification

தேவன் மாயம் said...

உணவை முடித்துக்கொண்டு அறைக்கு திரும்பும் வழியில் அமர்ந்திருப்பது போல் ஒரு பெரிய சிவன் சிலை தென்பட்டது //

இதுபோல் மதுரையில் கூட ஒரு பெரிய சிலை பார்த்தேன்!!

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு, பித்தன் பயணம் இனிதாக நடக்கட்டும்.

kishore said...

நல்லா இருக்குடா ... படங்களோட போட்டு இருந்தா இன்னும் நல்லா இருக்கும்...

கோவி.கண்ணன் said...

பயண கட்டுரை அருமை, படங்களையும் போட்டிருக்கலாம். கைவசம் இல்லாவிட்டாலும் இணையத்தில் தேடினால் கிடைக்காத படங்களா ?

ஆ.ஞானசேகரன் said...

அழகான பயணகட்டுரை

பாராட்டுகள் நண்பா

விக்னேஷ்வரி said...

நல்ல பயணக் கட்டுரை தந்துள்ளீர்கள்.
டெல்லியிலிருந்து ஹரித்வார் எவ்வளவு நேரப் பிரயாணம்... மற்றும் அங்கு எத்தனை நாட்கள் தங்கலாம்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி செய்யது (இருக்கலாம் -:) )

நன்றி சுரேஷ்

நன்றி தேவன்மயம்

நன்றி குடுகுடுப்பை

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி கிஷோர் (படங்கள் போட்டாச்சி )

நன்றி கோவியாரே

அங்க எடுத்த படங்களே போட்டாச்சி -:)

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி ஆ.ஞானசேகரன்

// விக்னேஷ்வரி said...
நல்ல பயணக் கட்டுரை தந்துள்ளீர்கள்.
டெல்லியிலிருந்து ஹரித்வார் எவ்வளவு நேரப் பிரயாணம்... மற்றும் அங்கு எத்தனை நாட்கள் தங்கலாம்.
//

டெல்லில இருந்து அதிகபட்சம் எழு மணிநேரம், ஹரித்வார்ல ஒரு நாள், ரிஷிகேஷ்ல ரெண்டு நாள் தங்கலாம் (எல்லா கோவில்களையும் பாக்கனும்னா)

அதிக நேரம் கங்கை கரையில் செலவழித்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சிதரும்.

Anonymous said...

வருகிற ஆகஸ்ட் 30 அன்று டெல்லியிலிருந்து வருகிறேன். ரிஷிகேஷ் , பத்ரிநாத் கேதார்நாத், டேராடூன் செல்லலாம் என்றிருக்கிறேன்.

மேற்படி இடங்களில் தங்கும் வச்திகள் எப்படி இருக்கிறது. தரமான ஹோட்டல்கள் கிடைக்குமா, முன் பதிவு செய்ய வேண்டுமா ? 2 வயது குழந்தையுடன் செல்கிறேன்,
பால் போன்றவைகள் தமிழ்நாட்டைப் போல வாங்கக் கிடைக்குமா ? டெல்லியில் இருந்து ரயிலில் செல்ல முடியுமா ?

இங்கிருந்து வந்த பிறகு டெல்லியில் 2 நாட்கள் தங்க திட்டம். எந்தப் பகுதியில் ஹோட்டல் எடுத்தால் எல்லா டூரிஸ்ட் பகுதிகளியும் கவர் செய்ய ஏதுவாக இருக்கும்.
இப்போதைக்கு அக்‌ஷர்தம், லோட்டஸ் டெம்பிள், பிர்லா மந்திர், குதுப்மினார், ரெட் போர்ட் பார்க்கத் திட்டம். பாக்கேஜ் டூர்-ல் சென்றால் நிம்மதியாக் பார்க்க முடியாது என்பதால்
தனியாக செல்ல உத்தேசம், எம்.ஆர்.டி. மற்றும் டாக்சியில் சென்றால் இரண்டு நாட்களில் கவர் செய்ய முடியுமா

நல்ல ஹோட்டல் பெயரையும் பரிந்துரைத்தால் தன்யனாவேன்.

நாராயணன்

Anonymous said...

டெல்லிக்கு வருகிறேன் என்று படிக்கவும்

வெற்றி-[க்]-கதிரவன் said...

/நாராயணன்

டெல்லிக்கு வருகிறேன் என்று படிக்கவும்
//

திரு நாராயணன்,

டெல்லி
------------
டெல்லியில் நீங்கள் சொன்ன இடங்களை இரண்டுநாட்களில் தாராளமாக பார்க்கயியலும். ஆனால் டாக்ஸி எடுத்துக்கொள்வது நல்லது. ஒரு நாள் வாடகைக்கு டாக்ஸி கிடைக்கும் உங்கள் பயணத்தில் நாடாளமன்றம், இந்தியகேட்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அக்ஷயதாம்முக்கு மாலையில் செல்ல பாருங்கள். மாலையில் மியுசிகள் பவுன்டைன் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும் கண்முன் சிவதாண்டவம் பார்ப்பது.
போன்ற உணர்வு கிடைக்கும்.

தமிழ் மக்கள் கரோல்பாக்கில் தான் அறை எடுத்து தங்குவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு ஹோட்டல் பற்றி அதிக விபரம் தெரியாது.

அரசுக்கு சொந்தமான இரண்டு தமிழ்நாடு இல்லங்கள் டெல்லியில் இருக்கின்றன. ஆனால் முன்பதிவு செய்யவேண்டும் என்று நினைக்கின்றேன். சென்னையில் இருந்தே முன்பதிவு செய்ய முடியும்.

****
ரிஷிகேஷ் & ஹரித்வார்
------------------------------------
நிறைய ஹோட்டல்கள் கிடைக்கும் ஆனால் சீசன் நேரங்களில் அவர்கள் சொல்வது தான் கட்டணம். இப்பொழுதே முன்பதிவு செய்ய இயலுமா என்று பார்க்கவும். நெடுநாட்களுக்கு முன்பு சென்றதால் ஹோடெல்களின் பெயர்கள் மறந்துவிட்டது மன்னிக்கவும்.

உங்களுக்கு நேரம் கிடைக்காவிட்டால் ஒரே நாளில் கூட இரண்டுதளங்களையும் பார்க்கமுடியும். ஆனால் இரண்டு நாட்கள் தங்கினால் இன்னும் வாழ்கையை பற்றிய தேடல் கூடும் -:)

*****
கேதர்நாத் & பத்ரிநாத்.
---------------------------------

குழந்தை மற்றும் குடும்பத்துடன் சென்றால் மழைக்காலத்தில் செல்வதை கண்ணைமூடிக்கொண்டு தவிர்க்கவும். மண்சரிவு, பெரிய பாறை உருளுதலால் விபத்து அதிகமாக இருக்கும். நான் நேரில் கண்டது மற்றும் உள்ளூர் வாசிகளிடம் இருந்து பெறப்பட்ட செய்தி.

ஏன் என்றால் ரிஷிகேஷிலிருந்து கேதர்நாத்துக்கு 250 கி.மீ அது போல ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத்துக்கு 300 கி.மீ மலையில் பயனம் செய்ய வேண்டும்.

ரிஷிகேஷ்சில் இருந்து கார் வாடகைக்கு எடுத்துக்கொண்டு கேதர்நாத் & பத்ரிநாத். கோவில்கலுக்கும் செல்வது சிறந்தது. குடும்பத்துடன் செல்பவர்கல் கண்டிப்பாக இப்படி செல்ல வேண்டுகிரேன்.

also you can't get milk in badri and kedar, only you can get milk powder. (i am not sure about now)

i have seen less than one year kid also in my trips, so there wont be any issue for your kid.

in sesson time room rents are very high in badri, kedar, joshimath, guptakasi and gourikunth.

might be less than 5 Deg celcious in badri and kedhar at night time,

will write all my trips in this blog.

if you need more info then mail me
naanpithan@gmail.com

Anonymous said...

பித்தன்,

விரிவான பதிலுக்கு நன்றி!!

மேல்விவரங்களுக்கு உங்களை மெயிலில் தொடர்பு கொள்கிறேன்.

நாராயணன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பயணம் தொடர்பான அனுபவங்கள் குறிப்புகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ரீடைரேக்ட் டு ரஜினி!
நன்று பித்தன் விஜய்!!