சிவகங்கா - கர்நாடகா

*

மாலையே, நாம சிவகங்கா போகலாம் ஐயப்பன் கோவில்கிட்ட இரவு நில்லுடா அலுவலகத்துல இருந்து நேரா வந்து கூட்டிகிட்டு போறேன்னு நண்பன் ராம் சொல்ல, இரவு பதினோரு மணிக்கு மேல ஐயப்பன் கோவிலுக்கு பக்கத்துல காத்துகிட்டு இருந்தேன். நண்பன் சொன்ன நேரத்துல இருந்து ரெண்டு மணிநேரம் கழித்து கோரமங்களா வழியா ஒரு வழியா ஸ்பெண்டர்ல வந்து சேந்தான். குளிர் காலம் இல்லாததுனால ஜெர்கின் கூட போடல. அவனும் அதேபோல.

எங்க ரெண்டு பேருக்குமே எப்படி போறதுன்னு வழி தெரியாது நண்பன் விசாரிச்சிட்டு வரன்னு சொல்லிட்டு அவனும் விசாரிக்காம வந்துட்டான். எப்படியாச்சும் போய்டலாம் அப்படின்னு முடிவு பண்ணி எஸ்வந்த்பூர் நோக்கி பயணித்தோம். பயணம் ஆரம்பிக்கும் பொழுது சிவகங்கால என்ன இருக்குன்னு கூட தெரியாது அது ஒரு மலை, ட்ரெக்கிங் போற இடம் அப்படின்னுத்தான் நினச்சேன். எஸ்வந்த்பூர தாண்டினவுடனே ஒரு பெட்ரோல் நிலையத்துல பெட்ரோல் போட்டுகிட்டோம், ரெண்டு பேரு இருக்கும் பொழுதே சொன்னத விட ஒரு லிட்டர் கம்மியா பெட்ரோல் போட்டுட்டு ஒரு லிட்டர்க்கு கூட காசு வாங்கிட்டான் பெட்ரோல் போட்டவன். எவ்வளவு பேசியும் அவன் ஒத்துக்கவே இல்ல. வேற வழி ஒரு லிட்டருக்கு கூட காசு போனது தான் மிச்சம்.

பெங்களூர் நகரத்த தாண்டினவுடனே குளிர் அதிகமா இருக்குரமாதறி இருந்தது அய்யயோ இது என்னடா வம்பா போச்சின்னு கர்சிப்ப எடுத்து காதோட சேத்துகட்டிகிட்டு பயணித்தோம். வழில ஒரு சின்ன பெட்டிகடை இருந்தது அங்க தேநீர் வாங்கிகுடிச்சிட்டு வழி கேட்டோம். அவரு கன்னடத்துல சொல்ல ஒரு வழியா புரிஞ்சிகிட்டு தொடர்ந்து பயணித்தோம் சாலை நன்றாக போடப்பட்டிருந்தது தேசிய நெடுஞ்சாலை என்று நினைக்குறேன்.

கொஞ்சம் தூரம் போறதுக்குள்ள இன்னும் குளிர் அதிகமா தெரிய ஆரம்பிச்சது, குளிர தாங்கமுடியாதால வண்டிய நிப்பாட்ட சொல்லி தங்கராசாவ துணைக்கு கூப்பிடடுகிட்டேன். எப்படித்தான் இந்த தம்ம அடிகுறிங்கன்னு படிக்குறப்ப இரண்டு வகுப்புக்கு ஒரு முறை என்ன தம்மடிக்க கூட்டிட்டு போன அதே நண்பர் கேட்டாரு. நேரம்டா இப்ப நீ இதுவும் கேப்ப இன்னமும் கேப்பன்னு சொல்லிட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம்... அண்ணே எப்படி வண்டி ஓட்டறேன் பாருன்னு அடிக்கடி கேட்டுக்குவான், சாலை நன்றாக இருந்தது ரொம்ப நேரம் கழித்து ஒரு நகரத்துக்குள்ள நுழைஞ்சோம் டும்கூர்ன்னு போட்டிருந்தது, தப்பா வந்தது மட்டும் நன்றாக புரிந்தது.

ஒரு லாரி ஓட்டுனரிடம் வழி கேட்க நீங்க முன்னாடியே இடது பக்கம் திரும்பிருக்கணும் என்று சொல்ல பல கி.மீ தேவையில்லாமல் பயணித்தது புரிந்தது திரும்ப வந்த வழியே சில கிலோமீட்டர் பயணித்தபிறகு சரியான வழியை கண்டுபிடித்து அந்த குறுகிய சாலையில் பயணித்தோம். சாலை ரொம்ப மோசமாகத்தான் இருந்தது ஒரு வழியா சிவகங்காவ அடைந்தபிறகு அறை எடுக்கலாம்ன்னு இருந்த எண்ணம் தகர்ந்தது, அது ஒரு சிறிய கிராமம் மலைக்கு மேல உள்ள கோவில் வேற திறக்க நேரமாகும் என்று சொன்னதால் மலை அடிவாரத்தில் நுழைவாயிலில் இருந்த திண்ணையில் படுத்துவிட்டோம் எப்படா விடியும் என்று கண்களை மூடிக்கொண்டு காத்திருந்தோம் ரெண்டு மணி நேரத்துலையே அந்த ஊரை அடைந்ததால. காலையிலேயே வந்திருக்கலாம் என்று தோன்றியது.

பெங்களூர்ல இருந்து எழுபது கி.மீ தான் ஆனா நாங்க நூறு கி.மீ மேல பயணித்து வந்திருப்போம்ன்னு நினைக்குறேன். அந்த குளுருல ரெண்டு மூணு மணிநேரம் கடத்துறதே பெருசா போச்சி. விடிந்ததும் கோவில் குளத்துல குளிச்சிட்டுதான் மலைமேல எறனும்ன்னு நண்பர் சொல்ல அந்த குளத்துல குளிச்சா மருத்துவமனைல கண்டிப்பா சேரனும் அந்த அளவுக்கு இருந்தது. கோவிலுக்கு போறப்ப கோவில் குளத்துலத்தான் குளிச்சிட்டு போகணும்ன்னு அவன் சொல்ல நா கோவிலுக்கு எல்லாம் வரல நீயே குளின்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே ரெண்டுபேர் அந்த குளத்துல குளிக்கபோனாங்க. இத பாத்த நண்பர் விடுவாரா வேற வழியில்லாம அந்த குளத்துல குளிச்சிட்டு பக்கத்துல இருந்த உணவகத்துக்கு சென்றோம்.

நாலு பெஞ்ச் போட்டுருந்தாக உணவகம்ன்னு சொல்லுரதவிட வீட்டு உணவகம்ன்னு தான் சொல்லணும் இட்லி மாதரி இருந்த ஒரு புது வகையான உணவ சாபிட்டோம் (கன்னட உணவு போல ) ரொம்ப நல்லாருந்தது, சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்கும்போது ஒரே அதிர்ச்சி, ரெண்டுபேருக்கும் சேத்தே பதினைந்து ரூபாய்க்குல்லத்தான் வாங்கினாக தப்ப கணக்கு போட்டுடாங்க போலன்னு நினச்சி சாப்பிட்டதெல்லாம் சொல்லி திரும்ப கேட்க அதே பணம்தான் வாங்கினாக.

மலைல ஏற ஆரம்பித்து கொஞ்சநேரதுலையே ஒரு குகை கோவில் வந்தது குகைக்குள்ள ஒரு லிங்கம் இருந்தது பெரிய குகை ஏற்கனவே ஐம்பதுக்கு மேல மக்கள் நின்னுகிட்டு இருந்தாக அபிசேகம் நடக்க ஆரம்பிச்சிது, நண்பர் பாத்துட்டுதான் போகணும்ன்னு சொல்லிட்டார் லிங்கத்துக்கு ஒவ்வொரு அபிசேகமா நடந்துகிட்டு இருந்தது இறுதியா வெண்ணைய லிங்கத்துமேல தடவி, திரும்ப அத எல்லாம் வழிச்சி எடுத்து ஒரு பாத்திரத்துல போட்டுடாக, எல்லாம் ஒரு வழியா முடிஞ்சி பூசைய ஆரம்பிச்சாக பூசை எல்லாம் முடிந்தபிறகு வெளியிலவரப்ப ஒரு இடத்துல ஒரே கூட்டம் என்னன்னு பாத்தா அந்த வெண்ணைய எல்லாம் ரொம்ப சின்ன டப்பால அடைச்சி இருபத்து ரூபாய்ன்னு வித்தாங்க அத வாங்கினதுல என் நண்பரும் ஒருத்தர், டேய் இத போய் காசு கொடுத்து வாங்கிகிட்டு வறியே, காலையில எவ்வளவு சாபிட்டோம் அதுக்கே இதவிட கம்மியாத்தான் அந்த பாட்டி வாங்கினாக, இத போய் காசுகொடுத்து வாங்கிட்டேயேன்னு தலைல அடிச்சிக்க சாமி பிரசாதம் தப்ப பேச கூடாதுன்னு சொன்னான், காசு இருக்குறவனுக்குதான் பிரசாதமே கிடைக்குது, இதுல சாமியாம் பூமியாம்ன்னு சொல்லிகிட்டே நடக்க ஆரம்பிச்சேன்.


வெய்யில் கொஞ்சம் அதிகமாச்சி பாதை வேற சொல்லிகிராப்புல இல்ல, டிரக்கிங் போக சரியான இடம், பாதை கரடு முரடாத்தான் இருந்தது, சில இடங்கள்ல ரொம்ப செங்குத்தா இருக்கும் வயசானவங்க ஏறது ரொம்ப கஷ்டம், செங்குத்தான இடங்கள்ல கம்பில இருந்து கைய்யவிடா அவளவுதான். சிவலோகத்த உடனே பாத்திடலாம், நிறைய புதுமண தம்பதிகள் வந்திருந்தாக பெரும்பாலும் பெங்களுர்ல இருந்து தான்.

ரொம்ப நேரம் கழித்து ஒரு வழியா மேல ஏறிப்போய் பாத்தா ஒரு சின்ன கோவில் இருக்கு அட இதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தம்ன்னு தோணிச்சி, குரங்குகளுக்கு வாழைப்பழம் வாங்கி கொடுத்துட்டு ஒரு பாறையோரம் நின்னுகிட்டோம் கொஞ்சம் வெய்யில் மற்றும் இனிமையான குளிர்ந்த காற்று வீசியது. அந்த காத்துக்காகவே திரும்ப போகலாம், இங்க இருந்துகுதிச்சித்தான் விஷ்ணுவரதனோட மனைவி தற்கொலை பண்ணிகிட்டாங்கன்னு ஒரு தமிழ் பய்யன் சொன்னான், கேட்க ஆச்சரியமா இருந்தது. பய்யன் அப்பறம் தான் சொன்னான் அந்த விஷ்ணுவரதன் ரொம்ப வருடத்துக்கு முன்னாடி வாழ்ந்த மன்னன்னு.

அங்கிருந்து கீழ பாக்க எல்லாம் பொம்ம மாதரி தெரிஞ்சது. தெளிவான சாலைகள், ஒரு புறம் ஏரி, வயல்வெளிகள் பார்க்க அற்புதம், தனிமைல நின்னு அத பார்த்தா எதோ நாம தான் இந்த தேசத்து ராசான்னு தோணும். நா கொஞ்சநேரம் தனிமைல போய் உட்காந்துகிட்டேன். அப்பறம் பொறுமையா கீழ இறங்கி வந்து அதே கடைல சாப்பிட்டுவிட்டு இரவு வீடு போய் சேர்ந்தோம். இது நடந்து பல வருடங்கள் ஆனாலும் இன்னும் அந்த இதமான தென்றலை நினைக்கும் பொழுது உடம்பு சிலிர்கிறது.
.
குறிப்பு : புகைப்படம் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.

3 comments:

வினோத்கெளதம் said...

Super daa...

சுசி said...

நல்ல ரசனையோட எழுதி இருக்கீங்க. கூட சேர்ந்து பயணம் செய்த மாதிரி இருந்துது.

பித்தன் said...

நன்றி வினோத்

நன்றி சுசி.