வைஷ்ணவாதேவி கோவில் - கட்ரா - ஜம்மு




எனது வடஇந்திய நண்பன் குப்தாவுடன் ஏற்கனவே ஒரு பயணம் சென்றிருந்த நிலையில். அடுத்த பயணம் வைஷ்ணவாதேவி கோவிலுக்கு செல்லலாம் என்று கூப்பிட, கோவில் என்பதை விட ஜம்முவை கடந்து அறுபது கி.மீ செல்லபோகிறோம் என்று கூறியதால் உடனே சம்மதம் தெரிவித்தேன். தொடர்வண்டியில் ஜம்முவரை முன்பதிவு செய்ய முயற்ச்சித்தோம் ஆனால் ஒரு இருக்கை கூட எங்கள் பயண தேதியில் கிடைக்காததால் பேருந்திலேயே செல்லலாம் என்று முடிவு செய்தோம். பேருந்து என்று முடிவான பிறகு எனக்கு ஒரே சந்தோசம் பஞ்சாப் வழியாக ஒரு பயணம் மேற்க்கொள்ளவேண்டும் என்ற எனது நெடுநாள் விருப்பம் நிறைவேறப்போவதை நினைத்து.

பயண தேதி அன்று ஒரு ஆட்டோவில் காஷ்மீரி கேட்டை நோக்கி புறப்பட்டோம், அந்த ஆட்டோ ஓட்டுனர் பந்தயத்தில் செல்வதை போல அந்த பெரிய சாலையில் குறுக்கும் நெடுக்குமாக பலவன்டிகளை முந்திக்கொண்டு பலபேரின் சாபத்தை வாங்கிகட்டிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார் ஒரு சிக்னலில் ஆட்டோ நிற்க, தொம் தொம் என்று அடி விழும் சத்தம் கேட்டது, அடி எங்கள் ஆட்டோ ஒட்டுனருக்குதான் பைக்கில் வந்த ஒருவர் அவரை அடிக்க ஆட்டோ ஓட்டுனர் திரும்பி அடிக்காமல் மனிப்பு கேட்டுக்கொண்டிருந்தார் உடனே என் நண்பன் "ராம் சே சலோ" என்று கூறிக்கொண்டிருந்தான். ஆறாம் சே என்றாலும் ராம்சே என்றாலும் ஒன்று தான் என்று தெரிந்துக்கொண்டேன். (இதே போன்ற ஒரு நிகழ்ச்சி மதுரா பேருந்து நிலையத்தின் வெளியில் சில மாதம் கழித்து கண்டேன் ஆனால் அதில் அடிவாங்கியது ஒரு அரசு பேருந்து ஓட்டுனர், அடி கொடுத்தது ஒரு பைக் ஓட்டுனர் ). பிறகு அந்த ஆட்டோ ஓட்டுனர் மெதுவாக எங்களை காஷ்மீரி கேட்டில் விட்டு சென்றார்.

குளிர்சாதம் செய்யப்பட்ட தனியார் வண்டிகளை தேடி ஒரு வண்டியிலும் இடம் கிடைக்காததால், வேறு வழியில்லாமல் அரசு பேருந்தை நோக்கி கிளம்பினோம் ஆனால் அங்கும் சொகுசு பேருந்து கிடைக்கவில்லை. நம்ம ஊர் டவுன் பேருந்தை போல ஒரு வண்டி ஜம்முவுக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தது அதை விட்டால் அப்பொழுது வேறு வண்டி இல்லை என்பதால் அதில் ஏறிக்கொண்டோம். வண்டி அம்பாலா, லூதியானா, ஜலந்தர் வழியாக ஜம்முவுவை நோக்கி சென்று கொண்டிருந்தது பஞ்சாப்பின் ஒரு சிறு சாலையோர கடையில் தேநீருக்காக நிறுத்தப்பட்டது. தேநீர் குடித்தப்பின் ஏண்டா குடித்தோம் என்று இருந்தது. பஞ்சாப் ஜம்மு எல்லையிலேயே வாகன சோதனை நடைபெற்றது, அனைத்து வண்டிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பின்பு விடியற்காலை ஜம்முவை அடைந்தோம், அங்கு சிறிது நேரத்துலையே கட்ராவுக்கு வண்டி கிடைக்க தொடர்ந்து பயணித்தோம்.

வண்டியிலிருந்தே ஜம்முவை பார்த்துக்கொண்டே சென்றேன், நகரின் பெரும்பாலான பகுதிகளில் ராணுவம் இருப்பதற்க்கான அடையாளங்கள் தெரிந்தது. கோபுரத்தின் மீது துப்பாக்கியுடன் காவல் காப்பது போன்றவற்றை இங்கு தான் முதன் முதலில் பார்த்தேன். ஜம்முவை கடந்தவுடன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி நடத்துனர் இரண்டு சீப்பு வாழைப்பழங்களை வாங்கினார், ஜம்மு நகரை கடந்தவுடன் மலை பகுதி ஆரம்பமாகியது. நிறைய வளைவுகளை கடந்து செல்லவேண்டிருந்தது, சாலையின் இடது பக்கத்தில் குரங்கு கூட்டங்களை தென்பட்டது, சென்று கொண்டிருந்த வண்டியிலிருந்து வாழைப்பழங்கள் வீசப்பட்டுக்கொண்டிருந்தது வேறு யாரும் அல்ல நம்ம நடத்துனர்தான் அந்த வேலையை செய்துகொண்டிருந்தார் நாட்டில் மழை பொழிய நம்ம நடத்துனரும் ஒருகாரணம் என்று எண்ணிக்கொண்டேன், பல மலைகளை கடந்து வண்டி கட்ராவை அடைந்தது.

மலைகளின் நடுவில் அந்த ஊர் அமைந்திருந்தது போல் இருந்தது. மழை பொழிந்து இருந்ததால் அந்த ஊரின் அழகை அது மேலும் கூட்டிருந்தது, வண்டியை விட்டு இறங்கியவுடன். எங்களிடம் அறை எடுத்துக்கொள்ளுங்கள் என்று நிறையபேர் சூழ்ந்துக்கொண்டனர், நாங்கள் ஒரு வரை தேர்ந்தெடுக்க அவர் அங்கு இருந்த ஒரு சிறிய அலுவலகத்தில் (பேருந்து நிலையத்திலேயே) எங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள சொன்னார், கோவிலுக்கு செல்பவர்கள் அனைவரும் அங்கு பதிவு செய்ய வேண்டுமாம். பதிவு செய்ததற்கு ஒரு ரசிது கொடுத்தார்கள்.

பின்பு கடைவீதி வழியாக எங்களை ஒரு விடுதிக்கு அழைத்துச்சென்றார், விடுதியில் குளித்துவிட்டு (வெந்நீரில்) விடுதிக்கு அருகில் இருந்த கடைக்கு சென்றோம். என்னுடைய ப்ரிபெட் சிம் எடுக்கவில்லை ஆனால் நண்பனின் போஸ்ட்பெட் எடுத்தது ப்ரிபெட் சிம் இந்த மாநிலத்தில் எடுக்காது பாதுகாப்பு காரணத்திற்காக தடைவிதித்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன், புகைப்பட கருவி எடுத்து வராததால் வாடகைக்கு ஒரு டப்பா புகைப்பட கருவியை எடுத்தோம். நண்பன் சூ போட்டுக்கொண்டே மலைக்கு போகலாம் என்று கூற, கூடவே கூடாது வெறும் காலுடன் தான் நடக்கவேண்டும் என்று கூறிவிட்டேன். கோவில் மலை அடிவாரத்துக்கு செல்லும் பொழுதே ஒரு சிறுவான் கையில் எண்ணையுடன் குறிக்கிட்டு அண்ணே காலுக்கு மசாஜ் செஞ்சிகிட்டு போங்க என்று கூற வேண்டாம் என்று கூறி நடையை கட்டினோம்.

மலையடிவாரத்திலேயே நன்கு பரிசோதனை நடைபெறுகின்றது. பரிசோதனைக்கு பின் பல கடைக்களில் பாரம்பரிய உடையை உடுத்தி புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். சிறிது தூரத்திலேயே ஒரு இடத்தில் அன்னதானம் வழங்க அங்கு உணவருந்த வேண்டும் அது நல்லது என்று குப்தா கூறினான். நானும் சம்மதித்து உணவருந்த சென்றேன், கட்டட வேலை செய்பவர்கள் பரிமாருவதுபோல இருந்தது, தினமும் ஆயிரகணக்கில் மக்களை காணும் அவர்களின் கடினம் புரிந்தாலும் அவர்களின் பரிமாறும் முறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பக்தர்களின் பொருட்களை சுமக்கவும், குழந்தைகளை சுமக்கவும் அதிகம் தாடி வைத்த முகமதியர்கள் உதவுகிறார்கள், ஒரு இந்து கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் முகமதியர்களை பார்க்க முடிந்தது. சிமென்ட் சாலை கோவில் வரை அந்த மலையில் போடபட்டிருகின்றது. கட்ராவிலிருந்து 12 கி.மீ மலையில் நடந்தே செல்லவேண்டும் பாதி வழியில் ஒரு குகை கோவில் இருக்கின்றது அங்கு தான் மாதா (வைஷ்ணவா தேவி) அரக்கனுக்கு பயந்து சிறிது காலம் தங்கியதாக என் நண்பன் கூறினான் அவன் இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து ஒரு வழியாக கோவில் புராணத்தை கூற ஏண்டா இவ்வளவு சக்தி வாய்ந்த தேவி ஒரு அரக்கனுக்கு பயந்து இந்த குகையில் தங்கினாங்க என்று நான் கேட்க, பதிலுக்கு ஒரு முறை முறைத்தான். குகைக்கு செல்லும் வழியில் (பெரிய வரிசையில்) பெரியவர்களின் கோசத்தை விட சிறியவர்களின் கோசம் பலமாக இருந்தது " ஜெய் மாத்தா தி" , "வைஷ்ணவோ மாதாக்கி ஜெய்" பலமுறை ஒலிக்கப்பட்டது.



குகைக்கு செல்லும் முன்பு பரிசோதனை பலமாக நடந்தது. தேவி இருந்ததாக கூறப்படும் குறையை நன்கு மொழுகி (ரப்பர் போன்று இருந்தது) வைத்திருக்கின்றனர் யாருக்கும் சிறு கீறல் கூட விழக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால் இருக்கலாம். குகைக்குள் நான் சிரமமில்லாமல் சென்று வந்தேன் நம்ம குப்தா கொஞ்சம் கடினப்பட்டார். குகை கோவிலுக்கு அடுத்து பயணத்தை தொடர்ந்தோம் செருப்பு இல்லாமல் நடந்ததால் கால்களில் வலி எடுத்தது (சிமெட் தரை தேய்ன்திருங்ததால்) புதியதாக போடாபட்டிருந்த சாலைகளில் செல்லும் பொழுது வலி இல்லை. இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்குமாம் அதே போல வடஇந்தியர்கள் திருமணமான பின் கண்டிப்பாக இங்கு வருவதை எழுத படாத சட்டமாக வைத்திருகிறார்கள் என்றும் கூறினான்.

கட்டி சாதம் கட்டிக்கொண்டு குடும்பம் குடும்பமாக வந்தவர்களை பார்க்க முடிந்தது. பல மாநிலங்களிலிருந்து இது போல வந்திருந்தனர். திடிரென்று தகரசத்தங்கள் கேட்டது, வழியெங்கும் நிறைய தகர பந்தல்கள் போட்டிருன்ததன் காரணம் அப்பொழுதான் புலப்பட்டது, கற்கள் மலையிலிருந்து உருண்டுவருவது பக்தர்கள் மீது படாமலிருக்கத்தான் அந்த ஏற்ப்பாடுஎன்று. ஒரு வழியாக மாலையில் கோவிலை அடைந்தோம் இந்த முறை இன்னும் சோதனை பலமாக இருந்தது தோலில் செய்யப்பட்ட எந்த பொருட்களும் உள்ளுக்குள் அனுமதிக்கப்படவில்லை, சோதனை சாவடி அருகிலேயே பாதுகாப்பு பெட்டகங்கள் இருக்கின்றன. சோதனையை முடித்து உள்ளே சென்றால் பெரிய வரிசையில் காத்திருக்கவேண்டி இருந்தது எங்களுக்கு முன்பும் பின்பும் இருந்தது புதுமண தம்பதிகள், அவர்களை பார்த்துவிட்டு நானும் தான் வந்திருக்கேனே உன்கூட என்று கூற நண்பன் கோபமாகிவிட்டான்.

(வைஷ்ணவாதேவி கோவில்)


நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு வரிசை நகர ஆரம்பித்தது ஒரு பெரிய தேவி படம் இருந்ததை பார்த்து அது தான் கருவறை என்று எண்ணிக்கொண்டேன் அனால் இன்னும் வரிசை வேறு எங்கோ சென்றதால் தொடர்ந்து சென்றேன் ஒரு குகை போல இருந்த இடத்துக்குள் சென்றோம் கருவறையை அடைந்த பின் எதோ ஒரு வித ஈர்ப்பு இருந்தது சிலைக்கு அருகில் செல்லும் பொழுது அங்கு எதோ ஒரு வித சக்தியை உணரமுடிந்தது என் பயண தொடக்கத்திலிருந்தே கொடைக்கானல் செல்வது போலத்தான் என் மனநிலை இருந்தது ஆனால் என்னால் எப்படி இதை உணரமுடிந்தது என்பதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது, நெடுநாட்கள் நாத்திகம் பேசி திரிந்தவனுக்கு திருவண்ணாமலை எதோ ஒரு சக்தி இருப்பதற்கான பிள்ளையார் சுழி போட மதுரா அதை வழிநடத்த வைஷ்ணவோ தேவி கோவில் அதற்க்கு முழுவடிவம் கொடுத்தது ஆனால் உருவமுள்ள கடவுளை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருந்துக்கொண்டே இருந்தது. இனம்புரியாத ஈர்ப்புக்கு கடவுள் என்று பெயர் கொடுத்து அதற்கான தேடலை நான் தொடங்க இந்த கோவிலும் முக்கியகாரணம் என்பதை மறுக்கயியலாது,

(வைஷ்ணவா தேவி)

கோவிலிலிருந்து வந்தபிறகும் ஆச்சிரியத்திலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை என் நண்பனிடம் கேட்க அவனுக்கும் அதே உணர்வு இருந்ததாக கூறினான். வழிபாட்டிற்கு கொடுத்த தேங்காய் பழத்திற்கு பதிலாக (கருவறைக்கு முன்பாகவே வாங்கிக்கொள்ளபடும்) வேறு தேங்காய் பலம் மற்றும் ஒரு பாகெட் கல்கண்டு கொடுத்தார்கள். அதோடு ஒரு சிறிய நாணயவடிவில் வைஷ்ணவோ கோவில் முத்திரை அச்சு பொறிக்கப்பட்டு இருந்தது. கோவிலை விட்டு வெளியேறும் பொழுது நன்றாக இருட்டிருந்தது கால் வலி வேறு, பேட்டரியால் இயங்கும் சிறியவாகநத்தை கொண்டு பாதி தொலைவு வரை கொண்டு விடுகின்றனர் அனால் அங்கு சென்று பார்க்க வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் என்று எழுதபட்டிருந்தது. வேறு வழியில்லாமல் நடந்தே செல்லவேண்டி இருந்தது.

பாதி வழியிலே நன்றாக மழை பிடிக்க நினைந்துக்கொண்டே இறங்கினோம். நீண்ட நேர பயணத்திற்கு பிறகு ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் நடக்கதொடங்கினோம் கட்ராவை அடைந்தபின் எங்கள் விடுதியை கண்டுபிடிக்க நெடுநேரம் பிடித்தது, நல்ல ஓய்வுக்கு பின் அடுத்தநாள் காலை குளித்துவிட்டு மலையை பார்க்க பனி மூடிருந்தது அட நாம மேல இருக்கும் போது இல்லையே என்ற வருத்தம் தொற்றிக்கொண்டது. ப்லிம் ரோலை வைத்துக்கொண்டு அந்த ஓட்ட காமெராவை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு கடைவீதிக்கு சென்று வேண்டியதை வாங்கிக்கொண்டோம் அப்பொழுதே மதியமாகிவிட்டது. டில்லிக்கு பேருந்து இல்லாததால் சண்டிகர் பேருந்தில் ஏறி பத்தான்கோட்டில் இறங்கிக்கொண்டோம்.

பத்தான்கோட்டில் பேருந்து நிலையத்திற்கு சற்று மும்பே இருந்த மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தின் நடுவில் நின்றுக்கொண்டு பேருந்துக்காக காத்திருந்தோம் நீண்ட நேரத்திற்கு பின் ராஜஸ்த்தான் போக்குவரத்து கழக பேருந்து வந்தது அதில் ஏறிக்கொண்டோம். முதன் முதலில் எந்திரத்தை கொண்டு நடத்துனர் பயணசீட்டு கொடுத்ததை இங்கு தான் பார்த்தேன் நம்ம ஊரிலும் வந்தால் எப்படி இருக்கும் என்று என்னினேன் (அப்பொழுது தமிழகத்தில் இந்த முறை கிடையாது ) நண்பன் அவன் சொந்த ஊரில் இறங்கிக்கொண்டான், ஜலந்தரில் தேநீருக்காக வண்டி நிறுத்தப்பட்டது அங்கு தேநீர் குடித்து விட்டு உறங்க டில்லி வந்தப்பின் நடத்துனர் எழுப்பித்தான் எழுந்தேன்.

நான் சென்ற கோவில்களிலேயே காசுக்கு மதிப்பு கொடுக்காத ஒரு கோவில் இதுதான் , மீண்டும் செல்லவேண்டு என்று எண்ணம் தோன்றியது ஆனால் இன்று வரை அந்த வாய்ப்பு அமையவில்லை.
(படங்கள் இணையதளங்களிலிருந்து எடுக்கப்பட்டது நாங்கள் வாடகைக்கு எடுத்த புகைப்படகருவியிலிருந்து படங்கள் மிகவும் அற்புதமாக வந்ததால் இங்கு கொடுக்கவில்லை)

17 comments:

கோவி.கண்ணன் said...

திகில் பயணம் போல் இருக்கிறது. இங்கெல்லாம் சென்று வருவதே மிகப் பெரிய அனுபவம் தானே. நல்ல வாய்ப்பு, பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

வால்பையன் said...

//ஒரு குகை கோவில் இருக்கின்றது அங்கு தான் மாதா (வைஷ்ணவா தேவி) அரக்கனுக்கு பயந்து சிறிது காலம் தங்கியதாக என் நண்பன் கூறினான்//

அரக்கனுக்கு ஒரு கோவில் கட்டனும்!

வால்பையன் said...

நானும் திருவண்ணாமலைக்கு சென்றிருக்கிறேன்! ஒரு புண்ணாக்கும் தோன்றவில்லையே!

உங்களுக்கு மட்டும் எப்படி?

லோகு said...

கோவில்களில் ஏதோ இருப்பதை, திருவண்ணாமலையில் தான் நானும் உணர்ந்தேன்.. (பழைமையான கோயில்களுக்கு போவது எனக்கு மிக பிடிக்கும்.. ஆனால் வாய்ப்பு தான் இன்னும் கிடைக்கவில்லை..

இந்த இடுகை, அந்த சிறப்பு மிக்க கோயிலை பற்றி தெரியாத பல விசயங்களை தெரிய படுத்தியது.. நேரில் பார்த்த மாதிர்யே இருக்கு.. (ரூட் மேப் கூட சொல்லி அசத்திடீங்க)

இன்னும் நிறைய எழுதுங்கள் அண்ணா..

அ.மு.செய்யது said...

அதெப்படி சுவாரஸியம் குறையாம எழுதறீங்க...

கலக்குங்க பாஸ்.

தேவன் மாயம் said...

பரவாயில்லையே வயசான காலத்தில் வரும் சந்தர்ப்பம் இப்போதே உங்களுக்கு வந்துவிட்டதே!!

தேவன் மாயம் said...

நல்ல நடையில் எழுதியுள்ளீர்கள்!!

வினோத் கெளதம் said...

சூப்பர் மச்சி..
இன்னும் நிறையா எழுதுடா..
நான் முன்னாடியே சொன்னது தான் கொடுத்து வைத்தவன் நீ..
இதே மாதிரி ஒரு வாய்ப்பு எனக்கு எப்பொழுது கிடைக்க போகிறதோ..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பய னுள்ள பதிவு விஜய்!

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி கோவியானந்தா சுவாமிஜி

//வால்பையன் said...

அரக்கனுக்கு ஒரு கோவில் கட்டனும்!
//

கிளைமாக்ஸ்ல அரக்கன அம்மன் கொன்னுட்டாங்க அதான் அம்மனுக்கு கோவில்,

//நானும் திருவண்ணாமலைக்கு சென்றிருக்கிறேன்! ஒரு புண்ணாக்கும் தோன்றவில்லையே!

உங்களுக்கு மட்டும் எப்படி?//

என்ன பண்ணுறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருமாதறி பீலிங் :)

நன்றி வால்பையன் :)

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி லோகு

நன்றி செய்யது

நன்றி தேவா சார்

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி வினோத்

நன்றி வெளிச்சபதிவரே -:)

லோகு said...
This comment has been removed by the author.
♫சோம்பேறி♫ said...

நீங்க லக்கி தான் பித்தன். ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. எழுத்துப் பிழைகள் வராம பாத்துக்கோங்க..

வெற்றி-[க்]-கதிரவன் said...

/♫சோம்பேறி♫ said... July 4, 2009 1:04 AM
நீங்க லக்கி தான் பித்தன். ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. எழுத்துப் பிழைகள் வராம பாத்துக்கோங்க..
//

கண்டிப்பா , நன்றி சோம்பேறி,

ரவி said...

அற்புதமாயிருக்கு...!!!!!!!!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

//செந்தழல் ரவி said...
அற்புதமாயிருக்கு...!!!!!!!!!
//

ரொம்ப நன்றிங்க செந்தழல்.